Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தமிழ்நாடு தினத்தையொட்டி தமிழக மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

தமிழ்நாடு தினத்தையொட்டி  தமிழக மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

உற்பத்தி, வாகன உற்பத்தி, ஜவுளி, மின்னணுவியல், விண்வெளித் தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழக மக்கள் கடின உழைப்பு மற்றும் தொழில்முனைவுத் திறன் மூலம் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருவதாக அவர் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: உற்பத்தி, வாகன உற்பத்தி, ஜவுளி, மின்னணுவியல், விண்வெளித் தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, புதுமையான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பத் திறன் மற்றும் தொழில் துறை வளர்ச்சி ஆகியவற்றில் தமிழகம் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.

தமிழக மக்கள் தங்களது பண்பாடு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது மிகுந்த பெருமிதம் கொண்டவர்கள். தமிழ் கலாச்சாரம் இந்தியாவின் நாகரிகப் பயணத்தைப் பல்வேறு வழிகளில் செழுமைப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு தினமான இந்நாள், தமிழக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் புதிய வாய்ப்புகளை வழங்கும் நாளாக அமையட்டும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி
இஸ்ரேல் பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுக்க திட்டம்
அடுத்த செய்தி
கிரீஸ் துறைமுகம் சென்றடைந்த இந்திய கடற்படையின் 'திரிசூல்'

தொடர்புடைய செய்திகள்